Saturday, December 17, 2011

பொன்னியின் செல்வன் - பாகம் ஒன்று, அத்தியாயம் பத்து

பெண்களை மலராகவும், நதியாகவும், நிலவாகவும் கோடான கோடி பேர் வர்ணனை செய்திருந்தாலும், கீழிருக்கும் வரிகளை படித்த பொது மிகவும் பரவசம் அடைந்தேன்.  கல்கியின் 'பொன்னியின் செல்வன்' பாகம் ஒன்று, அத்தியாயம் பத்தில் இதை கண்டேன்.  படித்து மகிழுங்கள்.


ஒருத்தி ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி. இன்னொருத்தி வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை. இருவரும் அழகிகள் என்றாலும், ஒருவருடைய அழகுக்கும் இன்னொருவருடைய அழகுக்கும் மிக்க வேற்றுமை இருந்தது. 


"ஒருத்தி செந்தாமரை மலரின் கம்பீர சௌந்தரியம் உடையவள். இன்னொருத்தி குமுத மலரின் இனிய அழகை உடையவள். ஒருத்தி பூரண சந்திரன். இன்னொருத்தி காலை பிறை. ஒருத்தி ஆடும் மயில். இன்னொருத்தி பாடும் குயில். ஒருத்தி இந்திராணி; இன்னொருத்தி மன்மதனின் காதலி. ஒருத்தி வேகவாஹினியான கங்காநதி; இன்னொருத்தி குழைந்து நெளிந்து செல்லும் காவேரி" 


#Ponniyin Selvan, #Kalki, #Pengal