Showing posts with label கிறுக்கனின் கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கிறுக்கனின் கிறுக்கல்கள். Show all posts

Tuesday, April 17, 2012

மகாகவி பாரதி

மகாகவி பாரதியை பற்றி சமீபத்தில் சிறிது படிக்க வாய்ப்பு கிட்டியது. என்னே அவன் கவிதை, என்னே அவன் கற்பனை.

என் சிறு பராயத்தில், பேச்சு மற்றும் பாட்டு போட்டியிலும், நான் பாரதியின் பல பாடல்களை அர்த்தம் புரியாமலேயே பயன் படுதியதுண்டு. இப்பொழுது மறுபடியும் அவற்றை படித்தல், ஒரு புதிய ஞானமும், சக்தியும் பிறக்கிறது.

அவனின் பாடல்களை என்றும் அழியா பொக்கிஷம் ஆக்க என்னால் இயன்ற ஒரு சின்ன முயற்சி: https://www.facebook.com/bharathiyar.mahakavi.

இதில் தங்களுக்கு விருப்பமுள்ள பாரதியின் பாடல்களை பதிவு செய்யுங்கள். அனைவருக்கும் மிக பயனுள்ள பக்கமாக இதை மாற்றலாம்.

மிக்க நன்றி.




Tuesday, March 6, 2012

பெண் பாலின் கதை


பெண்ணின் வாழ்கை, கடவுளின் கிறுக்கல்களில் ஒன்று. பிறப்பில் இருந்து இறப்பு வரை என்றுமே போராட்டம்.

ஒரு பெண் பாலின் கதை:

கள்ளிப்பாலில் தப்பிப்பிழைத்து,
காமதுப்பாலுக்கு பலியாகி,
தாய்ப்பால் கொடுத்தருளி,
இறப்பால் சுதந்திரம் அடைய நினைத்தாள்.

அனால் இறந்தால் பால் ஊற்ற மகனில்லை,
என்னும் பரிதவிப்பால் பிரிந்தது அவள் உயிர்.