Monday, September 9, 2013

ஆனந்த யாழை மீட்டுகிறாய் ...

நா.முத்துக்குமார் வரிகளில், யுவன் மெல்லிசையில் நான் என்னிலை மறந்தேன். மனதை உருக வைக்கும் பாடல்.

இயக்குனர்  ராம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.




ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி 
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் 
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் 
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் 

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் 
பாஷைகள் எதுவும் தேவையில்லை 
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் 
மலையின் அழகோ தாங்கவில்லை 

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி 
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி 
இந்த மண்ணில் இதுப்போல் யாருமிங்கே 
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி 

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி 
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் 
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் 
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் 

தூரத்து மரங்கள் பார்க்குதடி 
தேவதை இவளா கேட்க்குதடி 
தன்னிலை மறந்தே பூக்குதடி 
காற்றினில் வாசம் தூக்குதடி

அடி கோயில் எதற்கு, தெய்வங்கள் எதற்கு 
உனது புன்னகை போதுமடி !
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே 
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி 

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி 
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்..

உன்முகம் பார்த்தல் தோணுதடி 
வானத்து நிலவு சின்னதடி 
மேகத்தில் மறைந்தே பாக்குதடி 
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி 

அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து 
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி 
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே 
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி 

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி 
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் 
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் 
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் !

#AanandhaYazhai #Thangameengal #Tamil-Lyrics

No comments:

Post a Comment

I'd appreciate if you can share your comments/suggestions on improving my blogs.